பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 25 பேர் உயிரிழப்பு..!

248

மெக்சிகோவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டிக்கு வெளியே துல்தேபெக் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையின் கட்டிடங்கள் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் அதே இடத்தில் மற்றொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்குப் போராடிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.