மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த ரொனால்டோவின் ரசிகர் பெயரை ஜெர்சியில் குறிப்பிட்டு இரங்கல் !

351

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த தனது தீவிர ரசிகனான சிறுவனுக்கு பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் சில நாட்களுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் உள்பட 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் தீவிர ரகிகரான
பள்ளி மாணவன் சான்டியாகோ பிளோர்ஸ் மோராவும் ஒருவர். இந்நிலையில் சான்டியாகோ, பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு தனது மகன் இறப்பு குறித்து கடிதம் எழுதியுள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்த ரொனால்டோ, தான் தற்போது விளையாடி வரும் ரியல் மாட்ரிட் அணியின் ஜெர்சியில், பாசமிகு எனது நம்பர் ஒன் ரசிகன் சான்டியாகோவிற்காக என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.