மெக்சிகோவில் மரண தினத்தை முன்னிட்டு எலும்புக்கூடுகளை போல் வேடமணிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்..!

265

மெக்சிகோவில் மரண தினத்தை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எலும்பூக்கூடுகளை போன்று வேடமணிந்து அணுவகுப்பில் ஈடுபட்டனர்.
மெக்சிகோ நாட்டு மக்கள் பல்வேறு பாரம்பரிய தினங்களை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அந்நாட்டில் மரண தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்றைய தினம் அந்நாட்டு மக்களின் பிரம்மாண்ட அணி நிகழ்ச்சி நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த அணி வகுப்பில், எலும்புக்கூடுகளை போன்றும் இறந்தவர்களை போன்றும் மக்கள் வேடமணிந்து அனைவரையும் கவர்ந்தனர்.