மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

371

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய முக்கிய அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அங்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. பிலிகுண்டுலுவிற்கு வரும் நீரின் அளவு 5200 கனஅடியில் இருந்து 6200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2444 கனஅடியில் இருந்து 5789 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 28 ஆகவும், நீர்இருப்பு 6.75 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அதிகரித்து வருவதால், தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவிற்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.