காவிரி கரையோரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்
2,ஆயிரம் டன் சாம்பல் தேங்கி கிடக்கிறது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 4 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் நாள்தோறும் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் அருகில் உள்ள புதிய அனல்மின் நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 23,000 டன் நிலக்கரி பயன்படுத்தப் பட்டு 6,ஆயிரம் டன் சாம்பலாக வெளியேறுகிறது . இந்த சாம்பல் உலர் மற்றும் ஈர சாம்பல்களாக தமிழகம் முழுவதும் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 500 க்கும் மேற்ப்பட்ட லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப் படுவதால் ,அனல் மின் நிலையம் அருகே காவிரிக் கரையில் பூலாம் பட்டி செல்லும் மெயின் ரோட்டில் தண்ணீர் புகுந்ததையடுத்து நேற்று முதல் போக்குவரத்து நிறுத்தப் பட்டதால் அனல் மின் நிலைய சாம்பல் எடுக்கும் பணி பாதிக்கப் பட்டுள்ளது.இதனால் 2,000 டன் சாம்பல் தேங்கி கிடக்கிறது. இதன் மூலம் நேரிடையாகவும்,மறைமுகமாகவும்,500-க்கும் மேற்பட்டோர் வேலை ஈழத்துள்ளனர்.