மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!

209

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் கபினி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 19, ஆயிரம் கனஅடியிலிருந்து 32 ஆயிரத்து 421 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

அதே நேரத்தில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 30, ஆயிரம் கன அடியிலிருந்து 26, ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. ஆனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் மற்றும் பரிசல்களை இயக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 2 வது நாளாக தொடர்கிறது.