குறுவை சாகுபடி கடந்த 6 ஆண்டுகளாக இழப்பு – விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

216

ஜீன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்க முடியாது என்ற முதலமைச்சரின் அறிவிப்பு, விவசாயிகள் தலையில் இடிவிழுந்தது போல ஆகிவிட்டதாக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறுவை சாகுபடியை கடந்த 6 ஆண்டுகளாக இழந்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். முதலமைச்சர் அமைச்சர்களோடு டெல்லி சென்று, பிரதமர் மற்றும் நீர்வளத்துறை செயலாளரை சந்தித்து, ஜீன் இறுதிக்குள்ளாவது தண்ணீர் திறந்துவிடும்படி வலியுறுத்த வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார். இல்லையென்றால், விவசாயிகள் வாழவே முடியாது என்கிற நிலை வரும், குறுவை சாகுபடி முற்றிலும் அழிந்து போகும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.