மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து 3 ஆயிரம் யூனிட் வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.

249

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து 3 ஆயிரம் யூனிட் வண்டல் மண் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகள் தூர் வாரப்பட்டு அதில் கிடைக்கும் மணலை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 28ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதன்படி மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான பண்ணவாடி, மூலக்காடு, காவேரிபுரம், கூணாண்டியூர், புது வேலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மேட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் சம்பத், மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற தூர்வாரும் பணியில் 3 ஆயிரம் யூனிட் வண்டல் மண் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறினார்.