மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26,000 கன அடியாக உயர்வு!

389

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இவற்றில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 20 ஆயிரத்து 179 கன அடியில் இருந்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் விரைவில் 80 அடி எட்ட இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.