மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு!

402

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த எட்டாம் தேதி முதல் 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியில் இருந்து, 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அணையின் தற்போதைய நீர் இருப்பு 12 புள்ளி 63 டிஎம்சியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 150 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் மட்டம் 41 புள்ளி 04 அடியாகவும் இருந்து வருகிறது. நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.