மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

365

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய முக்கிய அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அங்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் சில தினங்களுக்கு முன்னர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால், வெறும் 37 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து ஆயிரத்து 2,150 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்து மூவாயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 21 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், 22 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.