மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது..!

166

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாதததால், குறுவை சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 53 அடியும், நீர் இருப்பு 15 புள்ளி 11 டி.எம்.சியும் இருப்பதால், இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 86 ஆண்டுகளில், மேட்டூர் அணை 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த 59 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், போதிய நீர் இருப்பு மேட்டூர் அணையில் இல்லாததால், இந்தாண்டும், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், பருவமழை பொய்த்ததாலும், தமிழகத்திற்கு உரிய நீர் காவிரியில் திறக்க கர்நாடக அரசு மறுத்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.