கபினியில் இருந்து காவிரிக்கு நீர் திறப்பு நிறுத்தம்..!

249

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்ட உபரி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வந்ததையடுத்து, கபினி அணை வேகமாக நிறைந்து வந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபிரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்நிலையில், கார்நாடகாவில் மழை குறைந்ததையடுத்து, கபினி அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்ட நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தேவைக்கு மட்டும் அணையில் இருந்து 250 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வினாடிக்கு 18ஆயிரத்து, 428 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அணைக்கு 13ஆயிரத்து, 694 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53புள்ளி 71அடியாகவும், அணையின் நீர் இருப்பு 20புள்ளி 90 டி.எம்.சி. யாக உள்ளது . குறுவை சாகுபடி நடைபெற உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.