மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

349

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி இருப்பதால், காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதால், ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கும் நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று காலை 33 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து பிற்பகலில் 48 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 புள்ளி 58 அடி உயர்ந்துள்ளது. இதனால் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 50 டிஎம்சியாக உள்ளது. இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.