மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிவு..!

346

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து, அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 15 ஆயிரத்து 487 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 11ஆயிரத்து 633 கனஅடியாகச் சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 14,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி நீரும் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது, அணைக்கு வரும் நீர்வரத்தை விட, பாசனத்துக்கு கூடுதலாக நீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119 அடியாகச் சரிந்தது.

அணையின் நீர் இருப்பு 91 புள்ளி 97 டி.எம்.சி.யாக உள்ளது. இதனிடையே, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 29-வது நாளாக தடை நீடித்து வருகிறது.