மேட்டூர் அணையின் நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியாக உயர்வு..!

296

மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர்மட்டம் 90 அடியை எட்டுகிறது.

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியதால் உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிக்குண்டுவை இன்று வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி வருகிறது. அணையில் நீர் இருப்பு 50 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து 45 ஆயிரத்து 300 கன அடியிலிருந்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இது இன்று மாலை 90 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4.72 அடியும், நீர் இருப்பு 5.8 டி.எம்.சி.யும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்வதையொட்டி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.