கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு..!

709

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணை இம்மாத இறுதிக்குள் முழு கொள்ளவை எட்ட வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. நேற்று மட்டும் 4 அணைகளுக்கு சேர்த்து வினாடிக்கு, 90 ஆயிரத்து, 190 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 56 ஆயிரத்து 652 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து, காவிரி நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், தமிழகத்திற்கும் நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு 25 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்தது. நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.