கபினி அணையிலிருந்து 2ம் கட்டமாக தண்ணீர் திறப்பு..!

367

கபினி அணையிலிருந்து 2ம் கட்டமாக திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரத்து 428 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை முழுக் கொள்ளவை எட்டியது. இதனால், கடந்த 14-ம் தேதி கபினி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், 2ம் கட்டமாக மீண்டும் கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரத்து 428 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 புள்ளி 36 அடியாக உயர்ந்துள்ளது.