தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் 100 அடியை எட்டிய மேட்டூர் அணை..!

169

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தமிழக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். முதற்கட்டமாக அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், அது படிபடியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சத்து 54 ஆயிரம் கனஅடியாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் நீர் நிரம்பி வழியும் ரம்மியமான காட்சி, கழுகுப்பார்வையில் இருந்து படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.