மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது

104

பாசன தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக கடந்த 6 ஆம் தேதி 8 ஆயிரம் கனஅடியிலிருந்து, 11 ஆயிரம் கனி அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது பாசன தேவை குறைந்துள்ளதால் இன்று காலை முதல் 11 ஆயிரம் கன அடியிலிருந்து ஆறாயிரம் கன அடியான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75 புள்ளி இரண்டு எட்டு அடியாக இருந்தது. நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து வினாடிக்கு 51 கன அடியிலிருந்து 109 கன அடியாக அதிகரித்துள்ளது.