மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!

198

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 25 அடியாக இருந்த நிலையில், 91 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. இரவு 8 மணியளவில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, காவேரி கரையோர மக்களுக்கு, தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில், துணை ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.