மேட்டூர் அணையில் இருந்து மேற்கு, கிழக்கு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

324

மேட்டூர் அணையில் இருந்து மேற்கு, கிழக்கு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிழக்கு, மேற்கு கால்வாயில், பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கிழக்கு, மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக முதல் கட்டமாக 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் பொதுப்பணித்துறையின் செயற் பொறியாளர் சுப்பிரமணி அணையில் இருந்து நீரை திறந்து விட்டார்.