மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து கிழக்கு, மேற்கு கால்வாயில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

261

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து கிழக்கு, மேற்கு கால்வாயில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் இருந்து பாசனத்திற்கு 500 கனஅடி நீர் முதல் திறந்து விடப்பட்டு வந்தது. இதனிடையே, பருவமழையின் தீவிரம் குறைந்து இருப்பதால், காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் வழியாக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 270 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.