மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

423

கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளிலிருந்து உபரி நீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 61 ஆயிரத்து 291 என அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை எட்டு மணி நிலவரப்படி 68 ஆயிரத்து 660 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 30 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 93 புள்ளி 95 டி.எம்.சியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 68 ஆயிரத்து 498 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.