சேலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மேட்டூர் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை – ஆட்சியர் ரோஹிணி

274

சேலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மேட்டூர் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருப்பதால் அணைக்கு வரும் 75 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதாக கூறினார். இதனால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ரோஹிணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்தார். சேலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேட்டூர் அணைக்கு எந்த பாதிப்பும் என்றும், ஆதலால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் விளக்கம் அளித்தார்.