மேட்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு…

328

மேட்டூரில் காவிரியாற்றில் குளித்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

திருப்பூர் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க, மேட்டூர் அருகே ரெட்டியூரில் வசித்து வரும் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, சரவணன், தனது மனைவி, மகன் மற்றும் மனைவியின் தங்கை மகள் ஆகியோருடன் காவிரியாற்றில் குளித்துள்ளனர். அப்போது, சரவணன், அவரது 9 வயது மகன் ஹரிஹரன் மற்றும் மனைவி மைதிலி, மனைவியின் தங்கை மகள் ரவீனா ஆகியோர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், அப்பகுதி மக்களுடன் பரிசல்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தனுஸ்ரீ என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வெள்ள நீரில் அடித்துச் சென்ற மற்ற 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.