ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

247

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயம் செழிக்க, காவிரி அன்னையை வணங்கும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட, மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்கோரி, காவிரிப்பகுதி மக்களிடம் இருந்தும், விவசாயிகளிடம் இருந்தும் தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கனஅடி தண்ணீ்ர் விடுவிக்கப்பட்டு வருவதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவு:
விவசாயம் செழிக்க, காவிரி அன்னையை வணங்கும் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்
ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட காவிரி மக்கள் , விவசாயிகள் கோரிக்கை
தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கனஅடி தண்ணீ்ர் விடுவிக்கப்பட்டு வருகிறது
25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதமும், அதன்பிறகு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விட வேண்டும்

மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு மற்றும் தண்ணீர் வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஆடிப்பெருக்கினை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட, வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதமும், அதன்பிறகு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.