மேட்டூர் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு தலா 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

228

மேட்டூர் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு தலா 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக 2016-17க்கான திருத்திய நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் 3வது நாளாக இன்று தொடங்கியது. அப்போது திமுக சார்பில் பேசிய எம்எல்ஏ ராஜேந்திரன் கண்புரை அறுவை சிகிச்சை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இதுவரை 5.5 லட்சம் பேருக்கு கண்புரை நீக்கியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் மேட்டூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு அடுத்து பேசிய திமுக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்ட மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய விஜயபாஸ்கர், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன் எச்சிரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் கண் அறுசை சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.