காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

173

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

தென்மேற்கு அரபி கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.