தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

175

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தென் மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முந்தினம், சென்னையிலும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றார். அதே போல், வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.