வட தமிழகத்தில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் – வானிலை ஆய்வு மையம்

321

வட தமிழகத்தில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருந்தது. இந்நிலையில் வட தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.