தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

101

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக அந்த மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகபட்ச மழை பொழிவு எங்கும் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ்-ம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் அந்த மையம் கணித்துள்ளது.