தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

355

வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அக்டோபர் 20-ம் தேதி முதல் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தநிலையில், காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அண்ணா சாலை, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.