தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு..!

507

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த இரண்டு தினங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சுட்டிக் காட்டியுள்ள வானிலை ஆய்வு மையம், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.