தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

299

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், வளிமண்டல மேலடுக்கில் தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக கூறினார். . இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். கடந்த 24 மணி நேரம் பொறுத்தவரையில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் நெடுங்காலில் 9 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.