தேனி, திண்டுக்கல், உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

218

தேனி, திண்டுக்கல், நீலகிரி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் இன்று காலை முதலே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிகிறது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் 26-ம் தேதி கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.