5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

390

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமடைந்திருப்பதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களிலும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.