பல்வேறு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

439

கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திண்டுக்கல், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காற்று 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.