தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

227

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதாகவும், வங்கக் கடலின் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கில் நகர்ந்தால் கூடுதல் மழை பெய்யக்கூடும் என்றும், அதே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இருந்து தமிழக பகுதிகள் வழியாக வடக்கு நோக்கி மேக கூட்டங்கள் நகர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.