தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

233

வெப்பச் சலனம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தின் வளி மண்டல மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.