தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

257

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 2 சென்டி மீட்டர் மழையும், விரிஞ்சிபுரம் மற்றும் சோழவந்தான் பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.