வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

308

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், சேலத்தில் 13 செ.மீட்டர் மழையும், ஏற்காட்டில் 12 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.