கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..!

311

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, கேரளா மற்றும் கர்நாடாகாவில் நிலை கொண்டு வருகிறது. இதனால் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.