தமிழக, புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

324

தென் தமிழகத்தில் பலத்த காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தென் தமிழகத்தில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.