தென் தமிழக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

299

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தென் தமிழக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று தென்மேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை அலைகள் உயர்ந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்பட்டது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.