தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்

297

தென் தமிழகத்தில் காற்று அதிகமாக வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில சமயங்களில் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை அலைகள் உயர்ந்து காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கடல் கொந்தளிப்பு அதிகம் என்பதால், தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.