தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

394

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.