தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

258

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் சுமார் 5 மீட்டர் வரை எழும்பும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.