தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் – வானிலை ஆய்வு மையம்

173

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து இருக்கும் என்றும், ஓர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓர் இரு இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலையை பொருத்த வரை வட தமிழகம் மற்றும் புதுசேரியில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.