தென் தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் – வானிலை ஆய்வு மையம்

143

தென் தமிழகத்தில் கடல் சீற்றம் நிலவுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளான, குளச்சல் முதல் கோடியக்கரை மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பும் எனவும் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.